பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து மீனா கூறிய அதிர்ச்சி தகவல்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தது குறித்து வெளிப்படையாக பேசி வரும் நிலையில் நடிகை மீனா இதுகுறித்து தனது கருத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
எல்லா துறைகள்லயும் பெண்களுக்கு பாலியல் பிரச்னை உண்டு. இந்த பிரச்சனையை நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட ‘டீல்’ பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்’ என்று கூறினார்.
மேலும் விஜய் மற்றும் அரவிந்தசாமி படங்களில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் போனது என்றும், பல படங்களில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதிலும் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை என்றும் தனது பேட்டியில் நடிகை மீனா தெரிவித்தார்