மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.13ல் நவராத்திரி துவக்கம்!

sapthastanam-18

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் அக்.,13 முதல் 22 வரை நடக்கிறது.இணை கமிஷனர் என்.நடராஜன் கூறியதாவது: உற்சவ நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்ப, சகஸ்ரநாமம் போன்ற சிறப்பு பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடக்கும். பூஜை நேரங்களில் தேங்காய் உடைத்தல், மூலஸ்தான அம்மனுக்கு அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்கு தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் செய்யப்படும். சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் அக்.,27 ல் நடக்கிறது. உற்சவ நாட்களில் திருக்கோயிலில், உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என்றார்.

நவராத்திரி அலங்காரம்

அக்.,13: ராஜராஜேஸ்வரி
அக்.,14: அன்னபூரணி
அக்.,15: வேதத்திற்கு பொருள் உரைத்தல்
அக்.,16: ஊஞ்சல்
அக்.,17: சிவசக்தி
அக்.,18: பட்டாபிஷேகம்
அக்.,19: சித்தர் திருக்கோலம்
அக்.,20: மஹிஷாசுரமர்த்தினி
அக்.,21: சிவபூஜை.

Leave a Reply