இரண்டு கைகள் இன்றியும் கரும்பலகையில் எழுதி பாடம் சொல்லி கொடுக்கும் அபூர்வ ஆசிரியர்
[carousel ids=”71610,71611,71612,71613,71614,71615,71616,71617″]
ஊனம் என்பது உடலுக்கு மட்டுமே.. மனதிற்கு அல்ல, என எத்தனையோ ஊனமுற்றவர்கள் தங்களுடைய மாற்றுத்திறனை வெளிப்படுத்தியதால்தான் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்ற பெயரே ஏற்பட்டது. உடலில் ஊனம் இருந்தாலும், மனதளவில் மிக தைரியமாக இருந்து யாருடைய உதவியும் இல்லாமல் தங்களை காப்பாற்றி கொள்வது மட்டுமின்றி, சமூக சேவை செய்யும் மாற்றுத்திறனாளிகளையும் நாம் பார்த்து கொண்டுதான் வருகிறோம். இந்நிலையில் சீனாவில் இரண்டு கைகளும் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளி சாக்பீஸில் கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஜியாங் செங்பா என்ற 41 வயது நபர் கடந்த 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்சார விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார். ஆசிரியர் பணி செய்து கொண்டிருந்த இவரால், இனிமேல் ஆசிரியர் பணியை தொடர முடியாது என்று கூறி பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து விடுவித்தது. ஆனால் ஒருசில இன்ச்க்கள் மட்டுமே மீதமிருந்த கைகளில் சாக்பீஸ் பிடித்து கரும்பலகையில் எழுதி பிராக்டீஸ் செய்து மீண்டும் தனது தளராத முயற்சியால் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
ஜியாங் செங்பாவின் மன உறுதியை பள்ளி நிர்வாகம் பாராட்டியதோடு, அவருக்கு தேவையான ஒருசில வசதிகளையும் பள்ளி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. கைகளை இழந்தாலும் ஆசிரியர் பணியை செய்ய வேண்டும் என்ற அவருடைய தளராத முயற்சிக்கு சீனாவின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.