வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் கமல் ஆரம்பித்து வைத்த கட்டிப்புடி வைத்தியம் தற்போது அமெரிக்கா வரை போய் உள்ளது. அங்குள்ள ஒருவர் கட்டிப்புடி வைத்தியத்தை ஒரு பிசினஸ் போன்றே செய்து வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் வசிக்கிறார் சமந்தா என்ற 18 வயது இளம்பெண் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்ற புதிய பிஸினஸை ஆரம்பித்திருக்கிறார். தனிமையில் இருப்பவர்கள், துணையை இழந்தவர்கள், மனம் விட்டுப் பேச நினைப்பவர்கள் எல்லாம் இவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு சில நிமிடங்களோ அல்லது சில மணி நேரமோ இவரை கட்டிப்பிடித்து தங்கள் மன அழுத்தத்தை போக்கிக்கொள்ளலாம். ஒரு நிமிடத்துக்கு 1 டாலர் இந்த வைத்தியத்திற்கு பணம் வசூலிக்கிறார் சமந்தா. 15 நிமிடங்களில் இருந்து 5 மணி நேரம் வரை இந்த கட்டிப்புடி வைத்தியத்தில் ஈடுபட அவர் அனுமதிக்கின்றார்.
இந்த தொழிலை இவர் ஆரம்பித்த ஒரே வாரத்திற்குள் சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டார்கள். சுத்தமாக வரவேண்டும், நன்றாக உடை அணிந்திருக்க வேண்டும், தீய எண்ணங்களுடன் வரக்கூடாது என்பவைகள் இவருடைய கண்டிஷன்கள் இதற்கென தனியாக ஒரு ஒப்பந்தம் எழுதி வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்கிறார்.
ஒப்பந்தம் போட்டாலும் ஒரு பாதுகாப்புக்காக, சிகிச்சையளிக்கும் அறைகளில் கேமராவைப் பொருத்தியிருக்கிறார்.