பெண்களுக்கும் ஐ.பி.எல் போட்டிகள் வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் வலியுறுத்தல்

பெண்களுக்கும் ஐ.பி.எல் போட்டிகள் வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் வலியுறுத்தல்

cricket6ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வரவேற்புடன் நடைபெற்று வரும் நிலையில் பெண்களுக்கு என தனியாக ஒரு ஐ.பி.எல் போட்டி தொடரை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா பெண்கள் அணி கேப்டன் மெக் லானிங் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ டி-20, ஒருநாள் போட்டிகளை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட பெண்கள் அணி ஆர்வமாக இருக்கின்றது. ஆனால் பெண்கள் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதற்கு டி20 கிரிக்கெட் தான் முக்கிய வழி.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு என நடத்தப்படும் பிக் பாஸ் மற்றும் இங்கிலாந்தில் நடத்தப்படும் சூப்பர் லீக் ஆகியவை பெரிய வெற்றிப் பெற்றுள்ள நிலையில் ஆண்களுக்கு நடத்துவது போன்று பெண்களுக்கும் ஐ.பி.எல். தொடர் வந்தால் அது பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். ஐபிஎல் போட்டி எங்களுக்காக நடத்தினால் நாங்கள் அதில் கலந்து கொண்டு விளையாட ஆர்வமாக இருக்கின்றோம்’ என்று கூறியுள்ளார். இவருடைய கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Chennai Today News Meg Lanning Wants For Separate Indian Premier League For Women Cricketers

Leave a Reply