இந்தியாவில் சேவை செய்ய இங்கிலாந்து மன்னர் குடும்பத்து மருமகள் விருப்பம்

இந்தியாவில் சேவை செய்ய இங்கிலாந்து மன்னர் குடும்பத்து மருமகள் விருப்பம்

சமிபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை திருமணம் செய்த பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்லே, இந்தியாவில் சமூக சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மும்பையில் செயல்பட்டு வரும் மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும் மேகன் மார்கலுக்கும் நடந்த திருமணத்தில் மைனா மகிளா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுஹானி ஜலோடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் மணமகளை சென்று பார்த்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்தினர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம், இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே தெரிவித்துள்ளார்.

Leave a Reply