காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பின் புதிய அரசு. முதல் பெண் முதல்வராகிறார் மெஹபூபா

காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பின் புதிய அரசு. முதல் பெண் முதல்வராகிறார் மெஹபூபா

mehboobvaகாஷ்மீர் மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீத் உடல்நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அங்கு புதிய ஆட்சி அமைவதில் ஏற்பட்ட சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முஃப்தி முகமது சயீத் அவர்கள் மகள் மெஹபூபா முப்தி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார். இவர்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மெகபூபாவின் வீட்டில் மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பி.டி.பி. கட்சித் தலைவராக மெஹபூபா முஃப்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மெஹபூபா முஃப்தியை அக்கட்சியின் மூத்த தலைவர் அல்டாஃப் புஹாரி முன்மொழிய அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் வழிமொழிந்தனர்.

இதன்மூலம் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த தேக்கமான சூழ்நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தன்னை மாநில சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மெஹபூபா கவர்னரை சந்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளனர். மெஹ்பூபாவின் ஆட்சிக்கு பாஜக ஆதரவு அளிக்க உள்ளது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக இருந்து வரும் ஜனாதிபதி ஆட்சி இன்று விலக்கிக்கொள்ளப்படும் என தெர்கிறது. காஷ்மீர் மாநிலத்தின் 13வது முதல்வராக மெகபூபா இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என தெரிகிறது. மெகபூபா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ.வாகவோ, மேலவை உறுப்பினராகவோ இல்லாததால் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply