ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக மெஹபூபா பதவி ஏற்பது எப்போது?

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக மெஹபூபா பதவி ஏற்பது எப்போது?

Mehbooba_2797129fஜம்மு-காஷ்மீர் மாநில புதிய முதல்வராக வரும் திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி மெஹபூபா பதவியேற்க உள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான இவர்தான் காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்தத் தலைவர் அமிதாப் மட்டூ ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “மெகபூபா முப்தி சாய்பா ஏப்ரல் 4-ல் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளதாகவும், மெகபூபா ஆட்சியில் மாநிலத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டு வளம் பெருகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததையடுத்து கடந்த 24ம் தேதி ஸ்ரீநகரில் மெகபூபாவின் இல்லத்தில் பிடிபி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூடி, அவரை முறைப்படி சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்தனர்.

கடந்த 26ஆம் தேதி கவர்னரிடம் ஆட்சியமைக்க அதிகாரம் கோரி இரண்டு கட்சிகளும் முறைப்படி கடிதம் வழங்கியதை அடுத்து வரும் 4ஆம் தேதி மெஹபூபா முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply