விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தவறான செய்தி போட்ட பத்திரிகையிடம் நஷ்ட ஈடு பெற்ற டிரம்ப் மனைவி

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தவறான செய்தி போட்ட பத்திரிகையிடம் நஷ்ட ஈடு பெற்ற டிரம்ப் மனைவி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தவறாக செய்தி வெளியிட்ட பிரபல பத்திரிக்கை அவருக்கு நஷ்ட ஈடு அளித்து அவரை சமாளித்துள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவியான மெலனியா டிரம்ப், மாடலிங் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் விபச்சாரம் செய்து வந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் பிரபல பத்திரிக்கை டெய்லி மெயில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்திக்கு டிரம்ப் மனைவி மெலினா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த செய்தியை டெய்லி மெயில் நிறுவனம் திரும்பப் பெற்றது. ஆனால் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடாக 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என நியூயார்க் மற்றும் லண்டன் நீதிமன்றங்களில் மெலனியா டிரம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் தவறான செய்தியை வெளியிட்ட டெய்லி மெயில் நிறுவனம், தங்கள் செய்திக்காக வருத்தம் தெரிவித்ததுள்ளது மட்டுமின்றி, நஷ்ட ஈட்டுத் தொகையையும் அளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை மெலனியா டிரம்ப் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் கேட்டிருந்த தொகையை விட, குறைவான தொகையே நஷ்ட ஈடாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply