பிரதமருடன் பில்கேட்ஸ் மனைவி சந்திப்பு.

melinda gatesமைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் மிகப்பெரிய மில்லியர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் அவர்களின் மனைவி மெலிண்டா கேட்ஸ் நேற்று டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஏழைகளின் நலன் சார்ந்த திட்டங்கள், குறிப்பாக பிரதமரின் கனவு திட்டமான தூய்மை இந்தியா, ஜன்தன் திட்டம் ஆகியவற்றுக்காக பிரதமரை மெலிண்டா பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

பில்கேட்ஸ் அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளாக உலக சுகாதார முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகிறது. தாய்-சேய் நலம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள், தடுப்பு மருந்துகள், குடும்பக் கட்டுப்பாடு, வேளாண் வளர்ச்சி, துப்புரவு – தொற்றுநோய்க் கட்டுப்பாடு ஆகியவற்றில் இந்த அறக்கட்டளையின் பணி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்தியாவிலும் சுகாதார பணியை மேம்படுத்த பில்கேட்ஸின் அறக்கட்டளை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமரிடம் மெலிண்டா கேட்ஸ் உறுதி கூறியதாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply