அப்துல்கலாம் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் மோடி.

அப்துல்கலாம் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் மோடி.

abdul kalamமுன்னாள் இந்திய ஜனாதிபதியும், அறிவியல் அறிஞருமான அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாளான வரும் ஜூலை 27-ம் தேதி அவரது நினைவிடத்தில் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், அந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ‘கலாம் நினைவிடம் பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படுவது குறித்த மத்திய அரசின் அறிவிப்பு என்ன ஆயிற்று என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் “கலாம் நினைவிடம் கட்டும் பணியில் தமிழக அரசு முழு ஆதரவை வழங்கிவருகிறது. இதற்காக மத்திய அரசு தரப்பில் 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தந்துள்ளது. கூடுதல் நிலம் கையகப்படுத்துவதற்காக காலம் தாழ்த்த மாட்டோம். வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்கும்” என்று கூறினார்,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் ராமேசுவரம் அருகில் பேய்க்கரும்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பலரும் இங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply