ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது ” அப்படியே நில்.. அசையாதே..” என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து
வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்
ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. ” இந்த பேருந்து
வேண்டாம்..”. அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன்
சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது..?” என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது..” நான் உன்
காவல் தெய்வம்”.
இவன் அடுத்தபடியாக கேட்டான்,,
“ஓ காவல் தெய்வமே… என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?”*