ஜெர்மனி அதிபரை அவமதித்தாரா டிரம்ப்? இருநாட்டு உறவு விரிசலாகும் அபாயம்

ஜெர்மனி அதிபரை அவமதித்தாரா டிரம்ப்? இருநாட்டு உறவு விரிசலாகும் அபாயம்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கன் நேற்று அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் கைகுலுக்குமாறு செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா, உங்களுக்கு விருப்பம் என்றால் கைகுலுக்கலாம் என்று கூறினார். ஆனால் டிரம்ப் அதை கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமின்றி கைகுலுக்கவும் இல்லை

கைகுலுக்குவது என்பது நட்புக்கு அடையாளமாக இருக்கும் நிலையில் ஜெர்மனி அதிபருடன் டிரம்ப் கைகுலுக்க மறுத்தது அவரை அவமதித்ததாகவே கருதப்படுகிறது. எனவே இதன் காரணமாக இருநாட்டில் நிலவி வரும் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply