மேத்தி சென்னா மசாலா

673f0a6a-6690-4e82-ad09-5e25df45c3b9_S_secvpf

தேவையான பொருட்கள் :

வெந்தயக் கீரை – 2 கட்டு,
சென்னா – 1 கப்,
மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள் – சிறிதளவு,
சீரகம் – ஒரு சிட்டிகை,
நெய்  – 1 டீஸ்பூன்.
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு

செய்முறை :

• வெந்தயக்கீரை இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக கழுவி வைக்கவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• சென்னாவை 10 மணி நேரம் ஊறவைத்து நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

• கடாயில் நெய்யை உருகவிட்டு, சீரகம் போட்டு தாளிக்கவும்.

• வெந்தயக்கீரையை சேர்த்து நன்கு வதங்கிய பின், வேகவைத்த சென்னா, மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• சாதம், சப்பாத்திக்குப் பொருத்தமானது.

Leave a Reply