மெட்ரோ அறிமுகம் செய்த மின்சார இருசக்கர வாகனம்: எங்கெங்கு கிடைக்க்கும்?

மெட்ரோ அறிமுகம் செய்த மின்சார இருசக்கர வாகனம்: எங்கெங்கு கிடைக்க்கும்?

சென்னை மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதப்படும் மெட்ரோவில் நாளுக்கு நாள் புதிய சேவைகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் ஃப்ளை என்றா நிறுவனத்துடன் இணைந்து புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

சென்னையின் கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த இருசக்கர வாகனங்கள் மக்களுக்கு கிடைக்கும்

ஐந்து ரூபாய்க்கு வண்டியை புக்கிங் செய்து ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை பெற கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஃப்ளை (FLYY) செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களுடன் ஓட்டுநர் உரிமத்தை பதிவு செய்து, ஒரு செல்ஃபியை தட்டி விட்டு, வாகனத்தின் க்யூ.ஆர் (QR) கோடை ஸ்கேன் செய்தால் போதும், வாகனம் தயாராகி விடும். பயணிகளுக்கு ஹெல்மெட்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மின்சார ஸ்கூட்டர் சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். எந்த மையத்தில் வேண்டுமானாலும் எடுத்து எந்த மையத்திலும் வண்டியை ட்ராப் செய்யலாம்.

Leave a Reply