தேவையான பொருட்கள்
கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்
கத்திரிக்காய் – 250 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 2
பிரியாணி இலை – 1
வெங்காயம் (பெரியது) – 2
தக்காளி – 2
கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள கத்தரிகாயை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு சீரகம், சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அவை நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் கரம் மசாலா போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
கஸ்தூரி மேத்தி மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,வறுத்து வைத்துள்ள கத்திரிகாய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும் இரண்டு நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு
தயிஇர் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ், சப்பாத்தி மற்றும் புல்காவுக்கு இது பொருத்தமாக இருக்கும்.