38 பத்திரிகையாளர்கள் கொலை எதிரொலி: மெக்சிகோ நாளிதழ் மூடப்பட்டதன் சோகம்

38 பத்திரிகையாளர்கள் கொலை எதிரொலி: மெக்சிகோ நாளிதழ் மூடப்பட்டதன் சோகம்

கடந்த பல வருடங்களாக பரபரப்புடன் இயங்கி வந்த மெக்சிகன் நாளிதழ் நார்டி(Norte) நேற்றுடன் இழுத்து மூடப்பட்டது. இந்த பத்திரிகையில் பணிபுரிபவர்கள் வரிசையாக கொல்லப்பட்டு வந்த நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பத்திரிகையை மூடுவதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

மெக்சிகன் நாளிதழில் பணிபுரிந்து கொண்டிருந்த 38 பத்திரிகையாளர்கள் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் அங்கு பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தொடர்ந்து நிலவி வரும் காரணத்தால் நார்டி(Norte) நாளிதழ் மூடப்படுவதாக இன்று வெளியான செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், ‘இன்றுடன் நாளிதழ் நிறுத்தப்படுகிறது. சமீபத்தில் சிஹுஹா நகரில் பத்திரிகையாளர் மிரோஸ்லாவா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் லா ஜோர்னடாவில் செய்தியாளராக பணியாற்றினார். மேலும் நார்டி நாளிதழிலும் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். அவரது இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனிமேல் எந்த ஒரு பத்திரிகையாளருக்கு இதுபோன்ற துயரங்கள் ஏற்படக்கூடாது என்றும் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி ஆஸ்கார் கண்டூ தெரிவித்துள்ளார்.

Leave a Reply