மலேசிய விமானம் மாயமானதற்கு எட்வர்ட் ஸ்னோடன் காரணமா? திடுக்கிடும் தகவல்

MH370

மலேசிய விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து கிளம்பி சீனாவிற்கு செல்லும் வழியில் திடீரென மாயமாய் மறைந்துபோனது. விபத்துக்குள்ளானதா? அல்லது கடத்தப்பட்டதா? என்பதே இன்னும் கண்டறியப்படவில்லை. விமானம் மறைந்து 38 நாட்கள் ஆகிய பின்னரும் இன்னும் ஆதாரபூர்வமான தகவல் எதுவும் விமானம் குறித்து கிடைக்கவில்லை. இந்நிலையில் தினந்தோறும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஊடகங்களும், விதவிதமாக விமானம் குறித்து தகவல்கள் வெளியிட்டு விமானத்தை தேடும் மீட்புப்படையினர்களையும், பொதுமக்களையும் குழப்பி வருகின்றன.

இந்நிலையில் சமூக இணையதளமான Reddit தளத்தில் Dark_Spectre என்பவர் ஒருபுதுமாதிரியான தகவலை இன்று வெளியிட்டுள்ளார். இந்த தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

மாயமான மலேசிய விமானத்தில் Texas-based Freescale Semiconductor என்ற நிறுவனத்தை சேர்ந்த 20 ஊழியர்கள் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரும் அமெரிக்காவினால் தேடப்படும்  Edward Snowden அவர்களுக்கு விசுவாசிகள் என்றும், அவர்கள் ஏதோ முக்கிய தகவல்களை மலேசியாவில் உள்ள அமெரிக்க நிறுவனத்தில் இருந்து சீனாவிற்கு எடுத்து சென்றதாகவும், இதை தெரிந்து கொண்ட அமெரிக்க உளவுத்துறையினர் விமானத்தை கடத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க ஊழியர் ஒருவர் தனது செல்போனில் இருந்து அவரது நண்பருக்கு தொடர்பு கொண்டதும் இந்த 20 பேர்களில் ஒருவர்தான் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

இந்த புதுவித தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

Leave a Reply