உலக நாடுகளின் எதிர்ப்பு காரணமாக கடத்தி சென்ற உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்.

dead bodyகடந்த 17ஆம் தேதி நெதர்லாந்தில் இருந்து மலேசியா நோக்கி வந்து கொண்டிருந்த MH 17 விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் பயணம் செய்த 298 பேர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில் பலியான பயணிகளின் உடல்களை சேகரித்து அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக குளிரூட்டப்பட்ட ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் என்ற நகருக்கு எடுத்துச்செல்லும் வழியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உடல்கள் அடங்கிய ரயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

இதற்கு உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யா மீதும், கிளர்ச்சியாளர்கள் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது பலியானவர்களின் உடல்களையும் விமானத்தின் கருப்புப்பெட்டியையும் உக்ரைன் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

மீட்கப்பட்ட 200 சடலங்களும் நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டு அடையாளம் காணப்படும் என்றும், அதன்பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் இரண்டு கருப்புப்பெட்டிகளும் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply