Diego Garcia தீவு சிறைச்சாலையில் மலேசிய விமானி பயணிகள்? திடுக்கிடும் செய்தி

 

2936710482

இந்திய பெருங்கடலில் உள்ள Diego Garcia என்ற தீவில் அமெரிக்காவிற்கு சொந்தமான ரகசிய சிறைச்சாலை ஒன்று இருப்பதாக பிரிட்டனின் ரகசிய ஏஜன்ஸி நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா போன்ற தீவிரவாதிகளை நாட்டிற்குள் உள்ள சிறையில் அடைத்து வைக்காமல் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க கடந்த 2006ஆம் ஆண்டு உலகின் பல இடங்களில் அமெரிக்காவுக்கு சொந்தமான சிறைச்சாலைகள் அமைக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முடிவு செய்திருந்தார். அதுபோலவே அமெரிக்காவின் நட்பு நாடான பிரிட்டனும் உலகின் பல இடங்களில் ரகசிய சிறைச்சாலை அமைத்தது. அதில் ஒன்றுதான் இந்த Diego Garcia தீவில் உள்ள சிறைச்சாலை என்று பிரிட்டன் ரகசிய ஏஜண்ட் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மாயமான மலேசிய விமானம் இந்த தீவு அருகே பறந்ததாகவும், இந்த தீவில் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து பரபரப்பு ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில் ரகசிய சிறைச்சாலை குறித்த செய்திகள் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும் இந்த தீவில் அமெரிக்காவின் ராணுவ அமைப்பும் உள்ளது.

மலேசிய விமானம் Diego Garcia தீவில் இறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இந்த சிறையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்காவும் பிரிட்டனும் மறுத்துள்ளன. இந்த மர்ம தீவு குறித்த விவரங்களும், அதனுடன் சேர்ந்து மாயமான மலேசிய விமானத்தின் விவரங்களும் கூடியவிரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Leave a Reply