மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதா? திடுக்கிடும் தகவல்

debris-mh370கடந்த மார்ச் 8ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு 239 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் MH 17 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்திய பெருங்கடலில் டைகோ கார்சியா தீவு அருகே வந்த போது திடீரென மாயமானது. கடந்த பல மாதங்களாக அந்த விமானத்தை தேடியும்  கிடைத்தபாடில்லை. எனவே அந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும் அதில் பயணம் செய்த 239 பேரும் பலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை  கிடைக்காததால் விமானம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மாரே துனகன் தற்போது புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

இவர் பிரான்சின் புரோடியஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரெஞ்ச் இதழின் ஆசிரியராக உள்ள அவர் தனது பத்திரிகையில் மாயமான மலேசிய விமானம் குறித்து 6 பக்கத்திற்கு சர்ச்சைக்குரிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையில் மாயமான மலேசிய விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதை 2001 ம் ஆண்டு செப்டம்பர் 9 ந்தேதி சம்பவத்தை போன்று அமெரிக்காவில் ஏதாவது கட்டிடத்தின் மீது மோதி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் இந்த உண்மையை தெரிந்து கொண்ட அமெரிக்க ராணுவம் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்  நடைபெறாமல் தடுக்க அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

டைகோ கார்சியா தீவில் இங்கிலாந்து ராணுவ தளம் அமைந்துள்ளது. அங்கு அதிநவீன சக்திவாய்ந்த கருவிகள் உள்ளன. அதன் மூலம் கண்டறிந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டிருக்கலாம் என விளக்கியுள்ளார்.

ஆனால் இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாயமான அன்று அந்த விமானம் அனைத்து ரேடார்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டது என தெரிவித்துள்ளது.

Leave a Reply