மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மத்திய உள்துறை அதிகாரி திடீர் தலைமறைவு.

மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மத்திய உள்துறை அதிகாரி திடீர் தலைமறைவு.

487021-mhaமத்திய உள்துறை அதிகாரி ஆனந்த் ஜோஷி என்பவர் திடீரென தலைமறைவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஒன்று சிபிஐ அவரை விசாரணைக்காக அழைத்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாகியுள்ள ஆனந்த் ஜோஷி தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: “நான் வீட்டை விட்டு புறப்படுகிறேன். என்னைத் தேட வேண்டாம். இனி நமது குழந்தைகளை நீதான் தந்தையாக இருந்தும் காப்பாற்ற வேண்டும். இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. எனது தேசப்பற்றே எனக்கு மிகப் பெரிய எதிரியாகி விட்டது. என்னைக் கையாள என்னாலேயே முடியவில்லை. அமைதியைத் தேடிச் செல்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறையில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைப் பிரிவில் இளநிலை செயலர் அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் ஆனந்த் ஜோஷி. க்ரீன் பீஸ், டீஸ்டா சால்வத் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்புடைய முக்கிய கோப்புகளை இவர் கையாண்ட நிலையில், சில என்ஜிஓக்களுக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக ஆனந்த் ஜோஷி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

மேலும் அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனை செய்தபோது ரூ.7.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையுடன் தொடர்புடைய பல முக்கிய கோப்புகள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த முடிவு செய்த சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஆனந்த் ஜோஷி, முக்கிய என்ஜிஓக்கள் மீது நடவடிக்கை எடுத்த ஒரே காரணத்துக்காக யாருடைய அழுத்தத்தின் பேரிலோ சிபிஐ மூலம், தான் பழிவாங்கப்படுவதாக ஆனந்த் ஜோஷி குற்றம்சாட்டினார். இந்நிலையில், அவர் திடீரென தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியை சிபிஐ முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Reply