பெங்களூரில் சியாமி நிறுவனத்தின் முதல் மொபைல் ஷோரூம்

பெங்களூரில் சியாமி நிறுவனத்தின் முதல் மொபைல் ஷோரூம்

சீன நிறுவனத்தின் சியாமி தயாரிப்பு மொபைல் போன்களுக்கு இந்தியாவில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய சந்தையில் நுழைந்த இந்த நிறுவனம் தற்போது இந்தியர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருப்பினும் சியாமி நிறுவனத்தின் மொபைல் போன்களை ஆன்லைனில் மட்டுமே புக் செய்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் நாம் வாங்க நினைக்கும்போது சில மாடல்கள் ஸ்டாக் இருக்காது.

இந்த நிலையில் சியாமி நிறுவனம் முதன்முதலாக இந்தியாவில் ஷோரூமை திறக்க உள்ளது. பெங்களூரில் சியாமியின் முதல் ஷோரூம் வரும் 20ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த விற்பனை நிலையத்தில் ஸ்மார்ட் போன்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான ஜியோமி நிறுவன தயாரிப்புகள் கிடைக்கும். இந்த ஷோரூமுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னை உள்பட இந்தியாவின் 100 முன்னணி நகரங்களில் ஷோரூம்களை திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

Leave a Reply