இந்திய செல்போன் சந்தையில் மைக்ரோமேக்ஸ் முதலிடம். சாம்சங்கை பின்னுக்கு தள்ளியது.

micromax and samsung இந்திய செல்போன் சந்தையில் நோக்கியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த சாம்சங் நிறுவனத்தை இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் முதன்முதலாக பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. நேற்று ஹாங்காங் நிறுவனத்தின் சந்தை ஆய்வறிக்கை வெளியானது. இதில் சாம்சங்கை விட இந்திய சந்ததயில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிடும் மாடல்களுக்கு அதிக கிராக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை கவுண்டர் பாயிண்ட் டெக்னாலஜி என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் மைக்ரோமேக்ஸின் சந்தைப் பங்கு 16.6 சதவிகிதமாகவும், சாம்சங்கின் சந்தைப் பங்கு 14.4 சதவிகிதமாகவும் இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. இதிலிருந்து நோக்கியாவில் இருந்து சாம்சங்கிற்கு மாறிய மக்கள் தற்போது சாம்சங்கில் இருந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.

மைக்ரோமேக்ஸ், சாம்சங்கை அடுத்து 3வது இடத்தில் நோக்கியாவும், 4வது இடத்தில் கார்பன் மொபைல் நிறுவனம் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனாலும் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் சாம்சங் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை அறிவித்துள்ளது.

Leave a Reply