மைக்ரோமேக்ஸ் யுரேகா-முதல் சயனோஜென்மோட் (CyanogenMod) மொபைல்!

play1220_3

ஜியோமி நிறுவனமும், ஒன் ப்ளஸ் ஒன் நிறுவனமும் சயனோஜென்மோட்(CyanogenMod) ஓஎஸ்-க்காக நீதிமன்றத்தில் மல்லுகட்ட, கேப்பில் ஆப் அடித்து விட்டது இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

தனது முதல் சயனோஜென்மோட்(CyanogenMod) மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோமேக்ஸ். செல்லமா, சுருக்கமா யு(Yu) என்று அழைக்கப்படுகிறது. 

இந்தச் சயனோஜென்மோட் என்பது ஆண்டிராய்டு 4.4.4 கிட்கேட் வெர்ஷனை மூலமாகக் கொண்டு இயங்கும். அஃபீஷியல் ஆண்டிராய்டு தொழில்நுட்பத்தில் இல்லாத ஏராளமான வசதிகளைக் கொண்டிருக்கும் சயனோஜென்மோட்.

கூடிய சீக்கிரமே இதற்கு லாலிபாப் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இந்த போனை ரூட் செய்தாலும் வாரண்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் டோர்ஸ்டெப்பில் சர்வீஸ் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளது யுரேகா.

இந்த மொபைலில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள நெக்ஸ்ட் பிட்(Next Bit) அப்ளிகேஷன் உங்கள் மொபைலிலுள்ள எந்தவொரு தகவலையும் அழியாமல் ஆன்லைன் கிளவுடில் பேக்அப் எடுத்து வைக்கிறது கூடுதல் ஸ்பெஷல்.

இயங்குதளம்:

சயனோஜென்மோட்(CyanogenMod) ஓஎஸ் 11

பிராசசர்:

2ஜிபி ரேம்-வுடன் 64-bit Qualcomm Snapdragon 615 chipset
1.5GHz octa கோர் பிராசசரை கொண்டு இயங்குகிறது.

ஸ்கிரீன்:

5.5 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய IPS டிஸ்பிளேவை (1280×720) கொண்டுள்ளது. 267ppi பிக்ஸல் அடர்த்திக் கொண்டுள்ளது.

கேமரா:

சோனி லென்ஸ் மற்றும் பிளாஷ்-வுடன் கூடிய 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும், 5 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது. 71 டிகிரி வைடு ஆங்கிள் படங்களை எடுக்கலாம். வெளிச்சம் குறைவான நேரத்தில் தெளிவாகப் படம் எடுக்கும் லோ லைட் போட்டோகிராபி தொழில்நுட்பம் இதில் உள்ளது.

நினைவகம்:

16 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது. 32 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

பேட்டரி:

இதன் பேட்டரி 2,500mAh திறனும் கொண்டது. தொடர்ந்து பயன்படுத்தினால் 8 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 310 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். வீடியோ ப்ளே பேக்கில் 6 மணி நேரமும், கேம் விளையாடினால் வெறும் 4 மணி நேரம் மட்டுமே பேட்டரி தாங்குவதாகக் கூறப்படுகிறது.

சிம்:

இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். ஆனால் மைக்ரோ சிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

Moonstone Grey நிறத்தில் இந்தப் போன் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
4ஜி LTE இணைப்பில் 150 எம்பிபிஸ் வரை டவுன்லோட் வசதி மற்றும் 50 எம்பிபிஸ் வரை அப்லோட் Band 40 மற்றும் Band 3 சப்போர்ட்.

போட்டியாளர்கள்:

தற்போது வரை இதற்கு போட்டி இல்லை. ஏற்கனவே மார்கெட்டில் உள்ள ஒன் ப்ளஸ் ஒன் மீண்டும் பிரச்சினைகள் எல்லாம் கடந்து வந்தால் இதற்குப் போட்டியாக அமையும்.

தனிச் சிறப்புகள்:

சயனோஜென்மோட்(CyanogenMod)
4ஜி LTE தொழில்நுட்பம்
Low light photography
நெக்ஸ்ட் பிட்(Next Bit) அப்ளிகேஷன்
போனை ரூட் செய்தாலும் வாரண்டி
லாலிபாப் ஓஎஸ் அப்டேட்

குறைகள்:

பேட்டரி லைப் மிகவும் குறைவு.

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக அமேசான் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ₹8,999 ரூபாய் .

Leave a Reply