மைக்ரோசாப்ட் கையகப்படுத்திய பிரபல் இந்தியரின் நிறுவனம்
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் லிங்க்டு இன் சமூக இணையதளத்தை விலைக்கு வாங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இந்தியரான விஷால் சர்மா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு கலிபோர்னியாவில் இயங்கி வரும் வாண்ட் லேப்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நேற்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
டெல்லி ஐஐடியில் கல்வி பயிறு கூகுள் நிறுவனத்தில் புராடெக்ஸ் பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றிய விஷால் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு வாண்ட் லேப்ஸ் நிறுவனத்தை கலிபோர்னியாவில் தொடங்கினார்.
மொபைல் அப்ளிகேஷன் டெக்னாலாஜியை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை கையகப்படுத்த கடந்த மார்ச் மாதம் மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு மிகப்பெரிய தொகைக்கு கைமாறியுளது. ஆனால் இந்த கையகப்படுத்துதல் தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.