வரும் 2015ஆம் ஆண்டிற்குள் 18 ஆயிரம் பணியாட்களை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நோக்கியா நிறுவனத்தை கைப்பற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனம், அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 12,500 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி “சத்யா நாடெல்லா” அனுப்பியுள்ள கடிதத்தில், ”மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதால் இந்த டிஸ்மிஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறினார்.
இதுதவிர இன்னும் 18,000 பணியாட்களை வரும் ஆண்டிற்குள் பணியில் இருந்து நீக்க முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த அதிரடி முடிவினால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.