அமெரிக்க அதிபருக்கு எதிரான கருத்தை கூறினாரா துணை அதிபர் மைக் பென்ஸ்?

அமெரிக்க அதிபருக்கு எதிரான கருத்தை கூறினாரா துணை அதிபர் மைக் பென்ஸ்?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சி காலத்தில் கையெழுத்தான அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தத்தை புதிய அதிபர் டொனல்ட் டிரம்ப் முட்டாள்தனமானது என்று சமீபத்தில் விமர்சனம் செய்தார். இந்த நிலையில் அந்த ஒப்பந்தம் ஏற்கப்படுவதாக அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புலுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அமெரிக்கா-ஆஸ்திரேலியா ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்று துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

*அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் நவம்பர் 2016 அறிவிக்கப்பட்டது. இது ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டம்.

*இது ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான Nauru, Manus Island, Papua Newguinea வில் உள்ள பல நாட்டு அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த போடப்பட்ட ஒருமுறை ஒப்பந்தம். அதே சமயம் Guatemala, Honduras, El Salvador வில் உள்ள அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் உறுதியளித்திருந்தார்.

*ஆஸ்திரேலியாவின் கணக்குப்படி, மனுஸ் தீவில் 871 அகதிகளும், நவுருவில் 383 அகதிகளுமாக மொத்தம் 1,254 அகதிகள் உள்ளனர். இவர்களையே சட்டத்திற்கு புறம்பான குடியேற்றவாசிகள் என டிரம்ப் இப்போது விமர்சித்துள்ளார்.

Leave a Reply