ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்ஸ்கள் விடுதலை. நாளை நாடு திரும்புகின்றனர்.

OOMMEN_CHANDY_1982978fஈராக் நாட்டில் கடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 இந்திய நர்ஸ்களை கிளர்ச்சியாளர்கள் ஈராக் ராணுவத்திடம் இன்று காலைஒப்படைத்ததாகவும், அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இந்திய தூதரகம் தகுந்த ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஈராக் நிலைமை குறித்த தகவல்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறாது..

இந்நிலையில் ஈராக்கில் ஈராக்கில் உள்ள பல முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்கு நிலைமை மிகவும் பதட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திக்ரித் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த நர்ஸ்கள் உள்பட மொத்தம் 46 இந்திய நர்ஸ்களை தீவிரவாதிகள் கடத்தினர். அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக கிளர்ச்சியாளர்களால் வேறு சில இடங்களுக்கு மாற்றப்பட்டு வந்தன. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடத்தப்பட்ட 46 நர்ஸுகளையும் விடுவிக்க ஈராக் தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

விடுவிக்கப்பட்ட நர்ஸுகள் அனைவரும் இன்று இரவு அல்லது நாளை காலை நாடு திரும்புவார்கள் என எதிரபார்க்கப்படுகிறது.

Leave a Reply