தேவையானவை: பால் – ஒரு கப், காய்கறி துண்டுகள் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் சேர்த்து) – முக்கால் கப், வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு – 4 பல், மைதா – 3 டீஸ்பூன், மிளகுத்தூள்- அரை டீஸ்பூன், வெண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காய்கறி துண்டுகளுடன் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். கடாயில் வெண்ணெயை உருகவிடவும். பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். மைதா தூவி சூடுபட கிளறவும். இதனுடன் காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும் (வெந்த காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்தவும்). உடனே பால் விட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.