தேளில் இருந்து விஷத்தை பிரிக்கும் ரோபோ: இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை
தேள் என்பது கொடிய விஷமுள்ள ஒரு ஜந்து என்பதால் அதன் அருகில் செல்லவே அனைவருக்கும் பயமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் தேளின் கொடுக்கில் உள்ள விஷத்தில் மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ளது. உயிர்காக்கும் மருந்துகளில் இந்த விஷம் கலக்கப்படுகிறது.
இந்த நிலையில் தேளின் கொடுக்கில் இருந்து விஷத்தை எடுக்க சிறிய ரக ரோபோ ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடை குறைவான இந்த சிறிய அளவு ரோபோ தேளில் இருந்து விரைவாகவும், பாதுகாப்பாகவும் விஷத்தை பிரித்து எடுக்கின்றன.
தேளிடம் இருந்து விஷத்தை பிரித்து எடுப்பது மிகவும் கஷ்டமான காரியமாக இதுவரை இருந்த நிலையில் இந்த ரோபோ மிக எளிதாக அதே நேரத்தில் ஆபத்தின்றி பிரித்து எடுத்து விடுகின்றது.
இங்கிலாந்து விஞ்ஞானி மொயுத் மிகாமல் குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோவிற்கு ‘வெஸ்ட்-4’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ மிக சிறியதாக இருப்பதால் ஆய்வகம் அல்லது வெளியிடங்களில் வைத்து பணியாற்ற முடியும்