ஸ்மார்ட்போன் வரவால் இளைஞர்களின் பொன்னான நேரம் வீணாகிறதா? ஒரு ஆய்வு

ஸ்மார்ட்போன் வரவால் இளைஞர்களின் பொன்னான நேரம் வீணாகிறதா? ஒரு ஆய்வு

smart phoneஉலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் தற்போது செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக அனைத்து இளைஞர்களிடமும் தற்போது ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரவால் இளைஞர்களின் பொன்னான நேரம் வீணாவதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து ஒரு ஆய்வினை கனடா தலைநகர் டொரண்டாவை சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்துள்ளது. இந்த ஆய்வில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்டுகளில் செலவிடுவதாக கூறியுள்ளது.

குளோபல் வெப் இண்டக்ஸ் என்னும் நிறுவனம் எடுத்துள்ள இந்த புள்ளிவிபரத்தின்படி, 18 முதல் 32 வயதுள்ள ஒவ்வொரு இளைஞரும் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் 14 நிமிடங்கள் சராசரியாக ஸ்மார்ட்போன்களில் மட்டும் செலவிடுவதாகவும், இந்த நேரம் கடந்த 2012ஆம் ஆண்டைவிட இருமடங்கு அதிகரித்திருப்பதாகவும், இன்னும் வரும் ஆண்டுகளில் இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரம் அதிகரிக்கும் என்றும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 80, மற்றும் 90களில் இளைஞர்கள் மணிக்கணக்கில் செய்த வேலைகளை இன்றைய இளைஞர்கள் ஸ்மார்ட்போன் உதவியால் ஒருசில நிமிடங்களில் முடித்துவிடுவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

அண்மையில், ஜெர்மனியில் ஸ்மார்ட்போன்களில் மூழ்கியிருப்பவர்களுக்காகவே சாலைகளில் தரையில் டிராபிக் சிக்னல் விளக்குகளை பொருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply