இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. பொதுவாக முதியவர்களுக்கம், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.
சாமை சோறு, சாமை பொங்கல், சாமை இட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப்பம், சாமை புட்டு இவ்வாறு சாமை அரிசியில் செய்த பதார்த்தங்களை பசித்த பின்னர் உட்கொள்ளும் போது நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உரிதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.