கம்பு காலிப்ளவர் அடை

aadai

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 1 கப்

உப்பு – தேவையான அளவு

தயிர் – அரை கப்

காலிப்ளவர் – சிறியது 1

சீரகம் – 1 ஸ்பூன்

வெங்காயம் பொடியாக நறுக்கியது — கால் கப்

கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது – சிறிதளவு

கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – சிறிதளவு

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2 ஸ்பூன்

மிளகு பொடித்தது – அரை ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு உப்பு போட்டு 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.

• காலிப்ளவரை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தி ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்து மாவில் சேர்க்கவும்.

• அடுத்து சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து  நன்கு கலக்கி வைக்கவும்.

• அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும். சூடான கல்லின் மேல் இரண்டு கரண்டி மாவை நடுவில் விட்டு வட்டமான அடையாக பரப்பவும். அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும். ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

Leave a Reply