1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை இங்கிலாந்து நாட்டின் Alchemist குருப் நிறுவனம் தயாரித்துள்ளது. லண்டனில் உள்ள Alchemist ஷோரூமில் இந்த ஐபோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் 24 காரட் தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த ஐபோன், ஒரு சில பட்டன்களை வைரத்தில் அமைத்துள்ளது. ஆப்பிள் என்ற லோகோவை கூட 53 வைரக்கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த ஐபோனின் விலை ஆறு கோடியே பத்து லட்ச ரூபாய் ஆகும்.
ஆப்பிள் ஐபோன் 5 மாடலில் 2 ஐபோன்களும், ஆப்பிள் ஐபொன் 5S மாடலில் 2 ஐபோன்களும் ஆக மொத்தம் நான்கு போன்கள் மட்டுமெ தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் இன்னும் அதிகளவு தயாரிக்க தயாராக இருப்பதாக Alchemist நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியன் அமெரிக்க டாலரா ஒரு ஐபொனா? என கேள்வி கேட்பவர்களுக்காக ஒரு கூடுதல் தகவல். கடந்த 2013ஆம் ஆண்டு லிவர்பூல் நகரில் உள்ள ஒரு நிறுவனம்15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு ஐபோனை தயார் செய்தது என்பதுதான் கூடுதல் தகவல்.