எம்எல்ஏக்களுக்கு லேப்டாப்; சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு லேப்டாப்; சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்துய் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன

ஒரு சில மாணவர்கள் இந்த லேப்டாப்பை விற்பனை செய்து வந்தாலும் பல மாணவர்களுக்கு இந்த லேப்டாப் உதவிகரமாக இருப்பதாகவும் கம்ப்யூட்டர் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள இந்த லேப்டாப் உதவியாக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் மாணவர்களுக்கு மட்டுமின்றி எம்எல்ஏக்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கையடக்க கணினி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்

இதனையடுத்து சற்றுமுன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்கள் ’முதலமைச்சர் உறுதி அளித்தபடி எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நிறைவில் கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவித்தார். எனவே இனிமேல் எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வரும்போது கையடக்க கணினியுடன் வருவார்கள் என்றும் எம்எல்ஏக்களும் டிஜிட்டலுக்கு மாற்றி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply