அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி திடீர் பறிப்பு. ஜெயலலிதா அதிரடி

agri1திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராகவும் இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தி இன்று அதிரடியாக கட்சி பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். விரைவில் அவருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேளாண்மைத்துறையில் காலியாக இருந்த  4 ஓட்டுநர்கள் நியனமத்திற்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு  தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அமைச்சரின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் பரவி வரும் நிலையில் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த குற்றச்சாட்டு காரணமாகவே அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முதலில் கட்சியின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் அல்லது நாளை அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பொறுப்பை அவருக்கு பதிலாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கூடுதலாகக்  கவனிப்பார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Leave a Reply