ரஜினி, கமல் இருவருக்கும் வரவேற்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார்
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து அதற்கான உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளார். அதேபோல் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் தனது ரஜினி மக்கள் மன்றத்திற்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உறுப்பினர்கள் சேர்க்க முயற்சித்து வரும் கமல், ரஜினி குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: தமிழகத்தை தீய சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க அதிமுக எனும் பேரியக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, அவரது அழைப்பை ஏற்று மக்கள் ஓடோடி சென்று கட்சியில் இணைந்தனர். ஆனால் இன்றைக்கு தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை எவ்வளவு? என்பதை கமல்ஹாசன் சிதம்பர ரகசியமாக வைத்துள்ளார்.
உறுப்பினர் சேர்க்கையை எதிர்பார்த்து கட்சி தொடங்கும் தினத்தை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக கூறுகிறார்கள். தமிழக மக்களிடம் இவர்கள் இருவருக்கும் வரவேற்பு இல்லை என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.
இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்