மீண்டும் ஒரு ’16 வயதினிலே’ படம் உருவாக்கலாம்: ரஜினி, கமலை கலாய்த்த ஜெயக்குமார்
ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்தால் மீண்டும் ஒரு ’16 போன்று ஒரு நல்ல திரைப்படம் உருவாக்கலாமே தவிர அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
ரஜினி கமல் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார்
மேலும் அதிமுக உறுதியான ஒரு இயக்கம் என்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அந்த இயக்கத்தின் வாக்கு வங்கியை ரஜினி கமல் உள்பட யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்