ஸ்மார்ட்கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா? அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் ரேசன் கார்டுகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வரும் மார்ச் முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டு அவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் மார்ச் மாதம் வரை பொதுமக்களுக்கு கெடு விதித்திருப்பது சரிதானா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அமைசர் காமராஜ் இதுகுறித்து விளக்கம் கூறியபோது, ‘மார்ச் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பது தவறான தகவல்; ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும், அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.