அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சும்மா இருக்கக் கூடாது. அமைச்சர் செல்லூர் ராஜூ
நதிகள் இணைப்பு விஷயத்தில் அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று காத்திருந்து பொதுமக்கள் சும்மா இருக்க கூடாது என்றும், நதிகள் இணைப்பிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நதிகள் இணைப்பிற்காக ஒரு பக்கம் சத்குரு தலைமையில், ஈஷா யோகா மையம் நதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்ன்னொரு பக்கம் பிரதமர் மோடி ரூ.6 லட்சம் கோடியில் நதிகள் இணைப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நதிகள் இணைப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நதிகள் இணைப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இத்துடன் நதிகள் இணைப்புக்கு அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சும்மா இருக்கக் கூடாது. வைகை ஆற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும் வைகை ஆற்றைச் சுத்தப்படுத்த துடிப்புடன் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.