மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்ற கார் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்ற கார் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
smiriti irani
சமீபத்தில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி நூலிழையில் உயிர் பிழைத்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, உ.பி மாநிலத்தை சேர்ந்த பிருந்தாவன் என்ற பகுதியில்  நடைபெற்ற பா.ஜ.க. கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தனது காரில் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தபோது யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் திடீரென அவரது கார் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில்  அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அமைச்சர் ஸ்ம்ரிதி  உயிர் தப்பினார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து ஸ்ம்ரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:  ”நான் நலமுடன் உள்ளேன். என்மீது அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்த கொண்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் நலம் பெற பிரார்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply