அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கைதா? வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கைதா? வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்

நேற்று முன்தினம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலெட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட நிலையில் இன்று மூவருக்கும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமானவரித்துறையின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த சம்மனை பெற்றுக் கொண்ட மூவரும் வருமானத்துறை அலுவலகத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தான் சட்டத்தை மதிக்கும் ஒரு இந்தியக் குடிமகன் என்பதால் இன்று கண்டிப்பாக வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகவும் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் நிரூபிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் இன்று கைது ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் இன்று நடிகர் சரத் குமார் மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் கீதாலெட்சுமி ஆகியோர்களும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவுள்ளனர்.

Leave a Reply