புதுக்கோட்டையில் போட்டியிட தயாரா? தினகரனுக்கு அமைச்சர் சவால்
நேற்று தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அதிமுக நடத்தியது. அந்த வகையில் நேற்று புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சவால் விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல என்றும், அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி என்றும் விமர்சித்தார்.
மேலும் 10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயலுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி – டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள் என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.