சசிகலாவை நீக்கக்கூடாது: திடீரென போர்க்கொடி தூக்கிய அமைச்சர்கள்

சசிகலாவை நீக்கக்கூடாது: திடீரென போர்க்கொடி தூக்கிய அமைச்சர்கள்

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதோடு அவரது நியமனங்களும் செல்லாது என்று இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் தீர்மானமாக ஒருமனதாக இயற்றப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கவும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு முன்வந்தது. ஆனால் இதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒருசில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் ராஜினாமா செய்வதாக மிரட்டியதால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது

இதன் மூலம் சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக இன்னும் அதிமுகவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply