பன்னீர் – அரை கப்,
புதினா இலை – ஒரு கைப்பிடியளவு,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – சிறிதளவு,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று,
சர்க்கரை – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• பன்னீரை சிறிதளவு எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
• புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
• மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
• சுவையான சத்தான புதினா – பன்னீர் கிரேவி ரெடி.