இயந்திரங்கள் முட்டாளத்தனமாக இருப்பதே நல்லது. பில்கேட்ஸ் பேட்டி

bill gatesஉலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கெட்ஸ், ரெடிட் இணையதளம் மூலம் வாசகர்களின் கேள்விகளுக்கு மனம்திறந்து பதிலளித்தார். அவற்றில் இருந்து சில கேள்வி பதில்கள்.

ஆங்கிலம் தவிர வேறு மொழி கற்காததை நினைத்து வருந்துகிறீர்களா?

ஆங்கில மொழி மட்டுமே பேசத் தெரிந்ததற்காக தன்னை முட்டாளாக கருதுவதாக தெரிவித்தார். பள்ளியில் லத்தீன் மற்றும் கிரேக்கம் கற்க முயன்று விட்டுவிட்டதாக கூறிய அவர், பிரெஞ்சு, அரபிக் அல்லது சீன மொழியை கற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார்.

யாரை பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்கள்?

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் சீன மொழியை பேச கற்றுக்கொண்டதற்காகவும், சீன மொழியில் அவர் கேள்வி- பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்த்து வியந்தேன்

எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் எப்படி இருக்கும்?

அடுத்த 30 ஆண்டுகளில் யாருமே எதிர்பாராத அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். இயந்திர மனிதர்கள் வழக்கமான வேலைகளை செய்யும் நிலை உருவாகும் என்றும், ஆனால் இயந்திரங்கள் சூப்பர் அறிவு பெறாமல் முட்டாளத்தனமாக இருப்பதே நல்லது. இயந்திரங்கள் அறிவு ஆற்றல் பெறுவது கவலையான விஷயம்

Leave a Reply