மிஷ்கினின் ‘சவரக்கத்தி’யில் ஒளிந்திருந்த ரகசியம்
சித்திரம் பேசுதடி முதல் பிசாசு வரை பல திரைப்படங்களை வித்தியாசமான கோணங்களில் இயக்கி வெற்றி பெற்ற இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் மிஷ்கின் தற்போது ‘சவரக்கத்தி’ என்ற படத்தை தன்னுடைய லோன்உல்ப் புரொடகஷ்ன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் வில்லனாகவும் நடிக்கின்றார்.
இந்த படத்தை மிஷ்கினின் உதவியாளர் ஆதித்யன் இயக்குகிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஆதித்யன், மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது மட்டுமின்றி அவருடைய உடன்பிறந்த சகோதரர் என்றும் இப்பொழுதுதான் திரையுலகினர்களுக்கே தெரிய வந்துள்ளது.
ஆதித்யனின் இயற்பெயர் சாமி என்றும் இயக்குநரான பின் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை மிஷ்கின் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அவரது சகோதரர் ஆதித்யன். பிரபல இயக்குனர் ராம், மற்றும் பூர்ணா இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.