விஜய்யின் மாஸ் பாடலுக்காக மிஷ்கின் செய்த ஃபிராடு
இளையதளபதி விஜய் நடித்த ‘யூத்’ படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவருமே தெரிந்ததே. ஆனால் இந்த பாடலை படத்தில் புகுத்த மிஷ்கின் செய்த ஒரு பிராடு தற்போது தெரிய வந்துள்ளது.
‘யூத்’ படத்தின் இயக்குனர் வின்செண்ட் செல்வாவிடம் மிஷ்கின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்த பாடலுக்கு பதிலாக வாலி எழுதிய பாடலை ஒலிப்பதிவு செய்ய படக்குழுவினர் தயாராகினர். ஆனால் இந்த பாடலில் திருப்தி அடையாத மிஷ்கின், யாருக்கும் தெரியாமல் வாலி எழுதிய பாடலி எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கபிலன் எழுதிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலை வைத்துவிட்டார்.
தமிழ் தெரியாத பாடகர் சங்கர் மகாதேவனும், இசையமைப்பாளர் மணிசர்மாவும் இந்த பாடலை ஒலிப்பதிவு செய்து முடித்துவிட்டனர். இந்த விஷயம் தெரிய வந்ததும் தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் அனைவரும் மிஷ்கினை திட்டினார்களாம். ஆனால் இயக்குனர் வின்செண்ட் மட்டும் மிஷ்கினை பாராட்டியுள்ளார். இந்த தகவலை மிஷ்கின் சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.