தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள திரைப்படம் ‘பிசாசு. இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் விஜய் தொலைக்காட்சியின் காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், ரஜினி என்றாலே தனக்கு ஞாபகம் வருவது ‘முள்ளும் மலரும்’ திரைப்படம்தான் என்று கூறிய அவர் அஜீத் குறித்து கருத்து கூறும்போது ‘பெரிய மனசுக்கு சொந்தக்காரர்’ என்று கூறினார். அஜீத்தை புகழ்ந்து கூறியதால்தான் என்னவோ அவரிடம் விஜய் குறித்த கேள்வியை டிடி என்ற திவ்யதர்ஷினி கேட்கவே இல்லை.
ஆனாலும் மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் ‘இனிமேல் சினிமாக்காரர்கள் யாரும் அரசியலுக்கோ அல்லது முதல்வராகவோ வராமல் பார்த்துக்கொள்வேன்’ என்று கூறினார். மிஷ்கினின் இந்த பேட்டி தற்போது டுவிட்டரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிஷ்கின் விஜய்யைத்தான் மறைமுகமாக அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்வேன் என்று கூறியதாக அஜீத் ரசிகர்கள் டுவிட் செய்து வருகின்றனர். இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.